200 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் ஆஸி. ஆப் ஸ்பின்னர் நாதன் லயன்

0
143

201607282017125092_Australia-Nathan-Lyon-Enters-200-Wicket-Club-in-Tests_SECVPFஆஸ்திரேலியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பல்லேகெலேயில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 117 ரன்னில் சுருண்டது. இதற்கு ஆஸ்திரேலியாவின் ஆப் ஸ்பின்னர் நாதன் லயன் முக்கிய காரணமாக இருந்தார். இவர் 3 ஓவர்கள் வீசி 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

2-வது இன்னிங்சில் இலங்கை அணிக்கெதிரான 3-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். 2-வது விக்கெட்டாக தனஞ்ஜெயா டி சில்வாவை வீழ்த்தியன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 55 போட்டிகளில் 200 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் 200 விக்கெட்டை வீழ்த்தும் முதல் ஆஸ்திரேலிய ஆப் ஸ்பின்னர் என்ற பெயரை எடுத்துள்ளார். 708 விக்கெட்டுக்களை வீழ்த்தி சர்வதேச அளவில் 2-வது இடத்தில் இருக்கும் ஷேன் வார்னே லெக் ஸ்பின்னராவார். ரிச்சி பெனாட் (248), கிளாரி க்ரிம்மெட் (216), ஸ்டூவர்ட் மெக்கில் (208) ஆகியோரும் லெக் ஸ்பின்னர்தான்.

28 வயதாகும் லயன் கடந்த 2011-ம் ஆண்டு இலங்கை அணிகெதிராக காலேயில் நடைபெற்ற டெஸ்டில் அறிமுகமானர். டெஸ்ட் போட்டியை தவிர்த்து 12 ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டியிலும் விளையாடியுள்ளார்.

இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆப் ஸ்பின்னர் ஹியூக் ட்ரம்புள் 142 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதே அதிகபட்சமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக 200 விக்கெட்டுக்கள் வீழ்த்திய 16-வது பந்து வீச்சாளர் என்ற பெயரையும், 5-வது சுழற்பந்து வீச்சாளர் என்ற பெயரையும் எடுத்துள்ளார்.

LEAVE A REPLY