நேபாளத்தில் பேருந்து விபத்து: முன்னாள் மந்திரி உட்பட 9 பேர் பலி

0
141

201607281648472075_Former-Nepal-minister-among-9-killed-in-bus-accident_SECVPFநேபாள நாட்டின் கிழக்கு பகுதி மாவட்டமான டான்குதா மாவட்டத்தில் உள்ள சிதுவா பகுதியில் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மலைப்பாங்கான சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் திரும்பிய பேருந்து சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இந்த கோர விபத்தில் 9 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.

30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் ஒருவர் அந்நாட்டின் முன்னாள் நிதித்துறை இணை அமைச்சரவார். ஹரி ரஜ் கேவா என்ற அவர், டான்குதா மாவட்ட சிபிஎன் -மாவோயிஸ்டு கட்சியின் தலைவராக செயல்பட்டு வந்தவர் ஆவார்.

LEAVE A REPLY