ஹஜ் கோட்டா அதிகரிக்கும் : ஏற்பாட்டுக் குழு

0
198

hajj28சவூதி ஹஜ் அமைச்­சி­ட­மி­ருந்து மேல­திக கோட்­டாவைப் பெற்றுக் கொள்­வ­தற்கு முஸ்லிம் சமய கலா­சார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் சவூதி ஹஜ் அமைச்­ச­ருடன் நேரடித் தொடர்­பு­களை மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் மேல­திக கோட்டா 1500 கிடைக்­கு­மென தான் எதிர்­பார்ப்­ப­தா­கவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் தெரி­வித்தார்.

அரச ஹஜ் குழுவும் சவூ­தி­யி­லுள்ள சாதிக் ஹாஜியார் மூலம் ஹஜ் கோட்டா மேல­தி­க­மாக பெற்றுக் கொள்ளும் முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரி­விக்­கையில்;
இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் அனைத்தும் பூர்த்­தி­யா­கி­யுள்­ளன. ஹஜ்­ஜா­ஜி­க­ளுக்கு பிர­தேச ரீதியில் விழிப்­பு­ணர்வு மற்றும் வழி­காட்டல் கூட்­டங்­களும் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

ஹஜ் முக­வர்கள், ஹஜ்­ஜா­ஜிகள் மற்றும் திணைக்­களம் உள்­ள­டங்­க­லாக உடன்­ப­டிக்­கை­களும் தயார் செய்­யப்­பட்­டுள்­ளன. மூன்று தரப்பும் உடன்­ப­டிக்­கை­களில் கையொப்­ப­மிட வேண்டும்.

உடன்­ப­டிக்­கைளில் குறிப்­பிட்­டி­ருக்கும் விடயங்கள் மீறப்பட்டால் ஹஜ் முகவர்களுக்கு எதிராக ஹஜ் குழு நடவடிக்கைகள் எடுக்கும் என்றார்.

LEAVE A REPLY