கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பபையின் முயற்சியினால் விவசாயிகள் எதிர்நோக்கும் நீர்ப்பாசனப் பிரச்சிணைகளுக்கு தீர்வு

0
121

(எம்.ஜே.எம். சஜீத்)

171c3d94-039b-4167-8717-a32557f13ac2அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் நீர்ப்பாசன பிரச்சிணைகள் தொடர்பாக சம்புக்களப்பு, சின்னமுகத்துவாரம், வள்ளக்குண்டு, நரிபிட்டி பிரதேசங்களுக்கு மத்திய நீர்ப்பாசன அதிகாரிகளும், வீதி அபிவிருத்தி அதிகார சபை உயர் அதிகாரிகளும் இன்று (28) விஜயம் மேற்கொண்டு பிரச்சிணைகளை ஆராய்ந்தனர்.

இதன்போது கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரும், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிகப் பணிப்பாளர் ஏ.எல்.எம் நிசார், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் எம். பீ. அலியார், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம் ஹனீபா, அக்கரைப்பற்று பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் டி. மயூரன், பொறியிலாளர் கே.எல்.எம் இஸ்மாயில் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

87fa3d18-049a-4c05-943d-f3a4c18c2379

b97e42e5-a8ba-4ed1-b32d-3ba858720a24

LEAVE A REPLY