ஆயுதங்களை கைவிட்டால் பொது மன்னிப்பு: சிரிய அதிபர் அறிவிப்பு

0
96

Assad_2949304f_2949321fஆயுதங்களை கைவிட்டால் பொது மன்னிப்பு அளிக்கப்படும் என போராளிகளுக்கு சிரிய அதிபர் பஷார் ஆசாத் அறிவித்துள்ளார்.

அரசாணை மூலம் அவர் இதனை அறிவித்துள்ளார். அந்த அரசாணையில், பிணைக்கைதிகளாக பிடித்துவைத்திருப்பவர்களை விடுவித்து ஒரு மாத காலத்துக்குள் அரசிடம் சரணடைபவர்களுக்கு எவ்வித தண்டனையும் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையும் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான அலப்போவைச் சுற்றிவளைத்திருந்த போராளிகளை அரசு லாவகமாக அடக்கிய நிலையில் சிரிய அதிபரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY