100 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தும், சரிவை சந்தித்த நிறுவனம்

0
98

201607281625271685_Apple-Says-One-Billion-iPhones-Have-Been-Sold-Agence-France_SECVPF2007-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஐபோன் வெளியிடப்பட்டது. அன்று ஆரம்பித்த ஆப்பிள் மோகம் முதல் முறையாக இந்த ஆண்டு குறைய தொடங்கியுள்ளது. அதை அந்த நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளது. முதல் முறையாக தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளாக ஆப்பிள் நிறுவன போன்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டின் விற்பனை 15 சதவீதம் குறைந்துள்ளது.

நேற்று கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் ஊழியர்களின் கூட்டத்தில் பேசிய தலைமை செயல் அதிகாரி டிம் குக், கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் தனது 100 கோடியாவது ஐபோனை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக அறிவித்தார்.

‘ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை எண்ணிக்கை முக்கியம் இல்லை, தரம் தான் முக்கியம். ஐபோன் மக்களின் அன்றாட வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது’ என டிம் குக் தெரிவித்தார்.

LEAVE A REPLY