(Photos) மட்டு-கல்லடியில் பணத்திற்காய் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது; பணம், பொருட்கள் மீட்பு

0
44

(விஷேட நிருபர்)

S9780003காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் பணத்திற்காக சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை நேற்றிரவு (27) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் குறித்த நபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதே அங்கு சென்ற பொலிசார் இவர்களை கைது செய்துள்ளனர்.

இவர்கள் கைதான இடத்திலிருந்து 9600 ரூபாய் பணம், பாய்கள் மற்றும் சீட்டாட்ட சாதனங்கள் என்பன பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காத்தான்குடி பெலிசார் மேலும் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

S9780001 S9780002

LEAVE A REPLY