தமிழ் சிங்கள பாடசாலைகளுக்கு நாளை இரண்டாம் தவணை விடுமுறை!

0
155

School Studentsநாட்டிலுள்ள தமிழ் சிங்கள அரச பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக நாளை 29ஆம் திகதி முதல் மூடப்படுகின்றன என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

மூன்றாம் தவணைக்காக மேற்படி பாடசாலைகள் எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இதேவேளை நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் யாவும், நோன்புப்பெருநாள் விடுமுறைக்காக கடந்த 06.06.2016 முதல் 06.07.2016 வரை மூடப்பட்டிருந்ததோடு, கடந்த 11ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டன.

முஸ்லிம் பாடசாலைகளில், எதிர்வரும் ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் இரண்டாம் தவணைக்கான பரீட்சை நடைபெறவிருக்கின்றது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை 12.08.2016 இல் வழங்கப்பட்டு, மீண்டும் மூன்றாம் தவணைக்காக 22.08.2016 இல் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Thinakaran

LEAVE A REPLY