உடல் எடையை குறைக்கும் கிவி

0
95

maxresdefaultகிவி பழம் என்பது தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும்.

இந்த பழத்தில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் உள்ளது. கிவி பழத்தில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும், இதில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் மற்ற கனிகளை விட மிகவும் அதிகமான அளவில் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் உண்பதற்கு சிறந்த பழமாக கருதப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை தடுக்கிறது.

விட்டமின் E-யானது பெண்களின் சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்க துணை புரிவதோடு அல்லாமல், பெண்கள் மிகவும் எளிதாகக் கருவுறும் தன்மையை உருவாக்குகின்றது. மூச்சுத் திணறல் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாகச் செயல்படுகின்றது. மேலும் நுரையீரல்கள் செயல்திறனை அதிகரிக்கிறது.

இதில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவான அளவில் உள்ளது. இதன் காரணமாக, தங்கள் உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் சாப்பிடலாம். முதுமையின் காரணமாக ஏற்படும் சிதைவு நோய்களான, கண் புரை, விழித்திரை சிதைவு நோயைத் தடுக்கின்றது.

LEAVE A REPLY