நாமலை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

0
108

Namal_Rajapaksa-720x480-720x480பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட ஆறு பேரை உடனடியாக கைதுசெய்ய கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இன்று (28) உத்தரவிட்டுள்ளார்.குறித்த உத்தரவினை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு நீதவான் பிறப்பித்துள்ளார்.

ஹலோ கோப் நிறுவனத்தின் ரூபா 10 இலட்சத்து 125 பெறுமதியான பங்குகள் கொள்வனவு செய்தமை, குறித்த பணம் அவருக்கு எவ்வாறு கிடைத்தது தொடர்பிலான சந்தேகத்தினை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு நீதிமன்றில் இன்று முன்வைத்திருந்தது.

இந் நிலையில் இது தொடர்பில் ஆராய்ந்த நீதவான் நாமல் ராஜபக்ஷ உள்ளிட ஆறு பேரையும் உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY