துருக்கி ராணுவத்தை முற்றிலும் மாற்றி அமைக்க அதிபர் முடிவு

0
200

201607281113072018_Erdogan-says-Turkeys-military-to-be-restructured-after_SECVPFதுருக்கி நாட்டில் 2 வாரங்களுக்கு முன்பு திடீர் ராணுவ புரட்சி ஏற்பட்டது. ராணுவ தளபதிகள் சிலர் ஒன்று சேர்ந்து அதிபர் ஆட்சியை கவிழ்த்துவிட்டு ராணுவ ஆட்சியை கொண்டுவர முயற்சித்தனர்.

ஆனால் பொதுமக்களே ராணுவ புரட்சிக்கு எதிராக திரண்டு ராணுவ புரட்சியை முறியடித்தனர்.

இதையடுத்து ராணுவ தளபதிகள், ராணுவ வீரர்கள், நீதிபதிகள், அரசு ஊழியர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பல ஆயிரம் பேர் ராணுவத்தில் இருந்தும், அரசு பணிகளில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

அங்கு மீண்டும் ராணுவ புரட்சி ஏற்பட்டு விடாமல் தடுக்கும் வகையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ராணுவத்துக்கும், போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் அதிக அதிகாரம் வழங்கி எதிர்ப்பு நிலைகளை கட்டுப்படுத்தி வருகிறார்கள்.

இத்துடன், ராணுவதை முற்றிலும் மாற்றி அமைக்க அதிபர் ரெசிப் ஏர்டோகன் முடிவு செய்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளை நடந்து வருவதாக துருக்கி மந்திரியும், அதிபரின் மருமகனுமான பெராத் அல்பயராக் தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு சில வாரங்களில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெராத் அல்பயராக் மேலும் கூறும்போது, ராணுவ புரட்சிக்கு முயற்சி நடப்பது முன்கூட்டியே எங்களுக்கு ஒரு நபர் மூலம் தெரிந்தது. ஆனாலும் காலதாமதமாகி விட்டதால் அதை முன்கூட்டியே தடுக்க முடியவில்லை என்றார்.

LEAVE A REPLY