தாவுல்வெவ பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

0
138

(அப்துல்சலாம் யாசீம்)

accident0திருகோணமலை-கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தாவுல்வெவ பகுதியில் இன்று (28) அதிகாலை இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய நபர் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் பக்மீகம-கோமரங்கடவெல பகுதியைச்சேர்ந்த தானில் சதறுவன் (18 வயது )எனவும் படுகாயமடைந்தவர் அதே இடத்தைச்சேர்ந்த சுதத் லக்மால் (18 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது -மோட்டார் சைக்கிளில் நண்பர்கள் மூன்று பேர் மதவாச்சி பகுதியிலிருந்து கல்கடவெல பகுதிக்கு இன்று (28) அதிகாலை சென்ற போது தாவுல்வெவ வளைவில் வீதியை விட்டு மோட்டார் சைக்கிள் விலகி விபத்துக்குள்ளானதில் இவ்வனர்த்தம் இடம் பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற மூவரில் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மற்றைய இருவரும் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

குறித்த இளைஞனின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக கோமரங்கடவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY