சாய்ந்தமருது எம்.பி.சி.எஸ். நிறுவனத்திற்கு ஜெமீல் முயற்சியினால் கணனி, போட்டோக் கொப்பி இயந்திரங்கள்!

0
102

(அஸ்லம் எஸ்.மௌலானா)

0ea08d2d-6729-47ad-8c1c-12524509698bகடந்த சில வருடங்களாக மூடப்பட்டிருந்து, புதிய நிர்வாகத்தின் கீழ் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ள சாய்ந்தமருது எம்.பி.சி.எஸ். நிறுவனத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி. ஏ.எம்.ஜெமீலின் முயற்சியினால் கணனி, போட்டோக் கொப்பி இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம்  ஜெமீல் விடுத்த வேண்டுகோளின் பேரில் அமைச்சரின் ஏற்பாட்டில் இவ்வியந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு, வழங்கப்பட்டுள்ளன.

நேற்று சாய்ந்தமருது எம்.பி.சி.எஸ். தலைவர் ஏ.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவற்றைக் கையளித்தார்.

இந்நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அப்துல் லத்தீப், சாய்ந்தமருது வர்த்தக சங்கத் தலைவர் அல்-ஹாஜ் ஏ.ஏ.சலீம், அ.இ.ம. காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழுத்தலைவர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அன்வர், செயலாளர் அப்துர் ராசிக், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ரி.கபீர் உட்பட எம்.பி.சி.எஸ். நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY