(Photo) கர்ப்பிணி தாய்மாரின் போசாக்கு உணவுப் பொதியில் காலாவதியான உணவுப் பொருள்: காத்தான்குடி வர்த்தகர் கைது

0
54

(விசேட நிருபர்)

1320cc50-2fde-44d0-93c0-60e68b8a9073மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் கர்ப்பிணித்தாய்மாருக்கு வழங்கப்பட்ட போசாக்கு உணவுப் பொதியில் காலாவதியான உணவுப் பொருளை வழங்கிய காத்தான்குடி வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவருக்கெதிராக சட்ட நடவடிக்கையும் எடுத்துள்ளதாக காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியிடம் செய்த முறைப்பாட்டையடுத்து காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு போசாக்கு உணவுப் பொதியினை வழங்கி வரும் காத்தான்குடி முதலாம் குறிச்சி பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் (27.7.2016) புதன்கிழமை மாலை திடீர் சோதனையை மேற் கொண்ட போது மனிதப் பாவணைக்குதவாத உணவுப் பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் என்பவற்றை காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தலைமையில் காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் கே.சத்தியானந்தன் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ரி.விதுன்ராஜ், மற்றும் Npஜ.ஜெயனிகாந், எம்.கருணாகரன் ஆகிய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இந்த சோதணை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது இந்த வர்த்தக நிலையத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் கர்ப்பிணித்தாய்மாருக்கு வழங்கும் போசாக்கு உணவுப் பொதியில் வைப்பதற்கு தயாராக இருந்த காலாவதியான உணவுப் பொருட்களான சோயாமீட் மற்றும் கடலை போன்ற உணவுப் பொருட்களும் அத்துடன் மனித பாவனைக்குதவாத நெத்தலிக்கருவாடு, மாசி, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன், கிறின் பிஸ், மிக்ஸர் வகைகள், அத்துடன் பழுதடைந்த கச்சான்கொட்டை, பழுதடைந்த அரிசி, பழம்புளி, காலாவதியான ஜேம் வகைகள் கருவாடு போன்ற உணவுப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மேற்படி உணவுப் பொருளுடன் குறித்த வர்த்தகரான எம்.ஏ.றஊப் எனும் சந்தேக நபரை 27.7.2016 புதன்கிழமையன்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னியிலையில் ஆஜர்படுத்திய போது 20000 ரூபா ரொக்கமும்; ஒருவர் சரீரப்பிணையிலும் பிணையில் நீதிபதி விடுவித்தார்.

இவரின் வர்த்தக நிலையம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதர்களுக்கு உத்தரவிட்டு;ள்ளார் என காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதே வேளை காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் கர்ப்பிணித்தாய்மாருக்கு வழங்கப்படும் போசாக்குப் பொதியை இனிமேல் மேற்படி வர்த்தகர் வழங்க முடியாது எனவும் அதற்கான உத்தரவை விடுத்துள்ளதாகவும் இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அறிவித்துள்ளதாகவும் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தெரிவித்தார்.

5db8e691-1910-447d-8fa0-9fdd3318fa01

9bca1d5c-3552-4c2a-a8bc-6f0eb46748df

9d0dbb46-2088-441c-b1cd-a2c89f676d49

12efdbda-5c0f-4419-97ae-728ed26020a2

99b6071f-5d55-4fb0-bb99-55fcbd3fecd6

240ca435-7f0d-4fc8-a87b-d4e5c3148353

608e78af-0f24-49d1-af72-4020c929f96f

776c0cf8-8180-49ff-95f6-072ccb7279b6

796acc91-3277-4d0e-bc44-f08f51c08999

1320cc50-2fde-44d0-93c0-60e68b8a9073

957334f3-ec67-40cc-b510-97d8c362640e

c2a990ab-0d30-4f12-9c61-13024af2f828

d6b1f32d-7f63-4448-b0dd-7effffb27db1

e8f1a196-e2de-4c3a-ad2a-6767811d51ad

e25a4754-ec80-46d8-93fa-2b9da15d5073

eb197cf3-2f25-4ffe-9c0a-8e413ca93bc1

fedf722b-5ff3-49e2-a991-5b8903f7fef7

LEAVE A REPLY