‘உலக அரங்கில் நீங்கள் யார்?’ – தன்னம்பிக்கை வழிகாட்டல் நிகழ்ச்சி

0
150

mortivationஇளைஞர்கள், யுவதிகள், பாடசாலை மாணவர்கள், வியாபாரிகள், குடும்ப தலைவிகள், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள் என அனைத்து தரப்பினருக்கும் உரிய முறையில் வழிகாட்டி தன்னம்பிக்கை அளிக்கப்படும்போது, இறைவன் உதவியால் அவர்கள் சமூக நீரோட்டத்தில் சாதனை படைக்கக் கூடியவர்களாக மாறலாம்.

இதனடிப்படையில் அறிமுகப்படுத்தப்படும் “உலக அரங்கில் நீங்கள் யார்?” என்ற புதிய தன்னம்பிக்கை நிகழ்ச்சியின் (Motivational Program) முதலாவது அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 29.07.2016 (வெள்ளிக்கிழமை) அன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இதில் பி.ப. 4.00 மணி முதல் 6.00 மணிவரை – இடம்பெறவுள்ள பெண்கள் அரங்கில், பிள்ளை வளர்ப்பு, பெண்கள் சுயதொழில், ஆரோக்கிய உணவு முறைகள், அன்றாட வாழ்வில் இன்டர்நெட் டின் பயன்பாடு, பயனுள்ள மொபைல் புரோக்கிராம்கள், குடும்பத்தை மகிழ்ச்சிப்படுத்தும் விஷேட சமையல் போன்ற விடயங்கள் அலசப்படவுள்ளன.

அதேபோல், பி.ப. 7.00 மணி முதல் 10.00 மணிவரை – பாடசாலை மற்றும் அனுபவக் கல்வி, இளைஞருக்கான ஒன்லைன் வேலைவாய்ப்பு, தற்கொலைக்கான தீர்வு, சமூக வலைத்தளங்களை வினைத்திறனாக்கல், வியாபாரத்தில் தொழில்நுட்பம், மின் வணிகம், வளர நினைக்கும் வியாபாரியின் ஆளுமை பண்புகள், அனைவருக்குமான புதிய வாய்ப்புகளை இனம்காணுதல், வியாபார வளர்ச்சிக்கான திட்டமிடல்கள் போன்றவை ஆராயப்படவுள்ளன.

பரந்துபட்ட உலகின் சமகால நடைமுறைகள், மாற்றங்கள், தொழில்நுட்ப வளர்ச்சிகள் பற்றிய தெளிவான அறிவைப் பெறுவதன் மூலம் – குறுகிய எண்ணங்களிலிருந்து வெளிவந்து பிரமாண்டமான வெற்றிகளை சாத்தியப்படுத்தும் வகையில் பல்வேறு சாதனையாளர்களின் வீடியோ தொகுப்புக்களுடன் எல்லோரையும் உற்சாகப்படுத்தக்கூடிய வகையில் தன்னம்பிக்கை-மஸாகியினால் வழிநடாத்தப்படவுள்ள இந் நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்.

ஏற்பாடு:
முஹாஸபா நெட்வேர்க் – காத்தான்குடி

Mazahim

LEAVE A REPLY