மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 32 வயது சாச்சா கைது: காத்தான்குடி கர்பலா கிராமத்தில் சம்பவம்

0
230

(விஷேட நிருபர்)

zajil add muslim girl abusedகாத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்பலா கிராமத்தில் சாச்சா முறையான குடும்பஸ்தர் தனது மனைவியின் சகேதரியுடைய 17 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இன்று (27) புதன்கிழமை மாலை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

17 வயதான இந்த யுவதியின் தாய் மத்திய கிழக்கு நாட்டில் தொழில் புரிவதால் தாயின் சகோதரியின் பராமரிப்பில் இருந்து வந்த மேற்படி யுவதியின் தாயினது சகோதரியின் கணவரான யுவதியின் சாச்சாவினால் இந்த யுவதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஊள்ளாக்கப்பட்டுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.

தனது சாச்சாவான இரண்டு பிள்ளைகளின் தந்தை தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குறித்த யுவதி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று செய்த முறைப்பாட்டினையடுத்து 32 வயதுடைய மேற்படி குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நாளை (28) வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY