அதிகார பகிரிவு முஸ்லிம்களுக்கு சாதகமா? பாதகமா? – வை.எல்.எஸ்.ஹமீட்

0
456

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)

YLS Hameedஇன்று இந்த நாட்டில் புதியதொரு அரசியல் அமைப்பு சட்டம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த அரசியல் அமைப்பு சட்டத்தில் பல விடயங்கள் இருக்கின்ற போதிலும் குறிப்பாக அதிகார பரவலாக்கம் முஸ்லிம்களை பொறுத்த வரையில் மிகவும் முக்கியமான விடயமாக இருக்கின்றது.

இன்று இந்த அதிகார பரவலாக்கம் தொடர்பாக முஸ்லிம்களுக்கு மத்தியில் தெளிவின்மை மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. பலரும் பலவிதமாக பேசுவதை காணக்கூடியதாகவும் இருக்கின்றது.

எங்களுக்கும், சிறுபான்மை இனத்திற்கும் அதிகாரம் வேண்டும் என பேசுகின்றவர்கள் மற்றும் அதிக பட்ச அதிகாரம், வட கிழக்கு இணைக்கப்பட வேண்டும் அல்லது, வடகிழக்கு பிரிக்கப்பட்ட வேண்டும் என பேசுகின்றவர்கள், தனி அலகு வேண்டும் என பேசுகின்றவர்கள் என பல தரப்பட்டவர்கள் எமது சிறுபான்மை சமூகத்தில் மத்தியில் இருக்கின்றார்கள்.

எனவே இது தொடர்பாக நான் தொடர் கட்டுரை எழுதி வருகின்றேன். அத்தோடு தொடர் கட்டுரைக்கு மேலாக சில விடயங்களை மக்களின் அவதானத்திற்கு கொண்டு வரும் அதே இடத்தில் அதிகார பகிர்வு முஸ்லிம்களுக்கு சாதகமா? அல்லது பதகமா? என்ற விளக்கத்தினை ஓடியோ காணொளியாக கொண்டு வரலாம் என நினைக்கின்றேன்.

அதிகார பகிர்வானது முஸ்லிம்களுக்கு பாதாகமா அல்லது சாதகமா எனும் தலைப்பில் வை.எல்.எஸ்.ஹமீட் வழங்கிய விளக்கமானது ஓடியோ காணொளியாக எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY