காத்தான்குடி ஜம்இயத்துல் உலமாவுக்கு NFGG யினால் மல்டிமீடியா ப்றொஜக்டர் அன்பளிப்பு

0
178

(NFGG ஊடகப் பிரிவு)

IMG-20160727-WA0024காத்தான்குடி ஜம்இயத்துல் உலமாவின் நீண்டகால அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருந்து வந்த மல்டிமீடியா ப்றொஜக்டர் ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அன்பளிப்புச் செய்துள்ளது. இதனை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு காத்தான்குடி ஜம்இயத்துல் உலமா சபையின் காரியாலயத்தில் நேற்று (26) மாலை இடம் பெற்றது.

ஜம்இயத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி கையூம் பலாஹி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் NFGGயின் சார்பாக அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இதனை ஜம்இயத்துல் உலமா சபையின் நிர்வாகத்தினரிடம் கையளித்தார்.

காத்தான்குடிப் பிரதேசத்தில் பல்வேறு மார்க்கப் பிரச்சார சமூக விழிப்பூட்டல்களை மேற்கொண்டு வருகின்ற ஜம்இயத்துல் உலமா சபையினருக்கு தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ப்றொஜக்டர் இயந்திரம் ஒன்று மிக நீண்ட கால அடிப்படைத் தேவையாக இருந்து வந்தது. இத்தேவையினை நிறைவேற்றித் தருமாறு NFGGயிடம் ஜம்இயத்துல் உலமா நிர்வாகம் சில வாரங்களுக்கு முன்னால் கோரியிருந்தது. அதற்கமைவாகவே இந்த அடிப்படைத் தேவையினை NFGG தற்போது நிறைவேற்றிக் கொடுத்துள்ளது.

IMG-20160727-WA0016இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜம்இயத்துல் உலமா பிரதிநிதிகள் இதனை நிறைவேற்றித் தந்த NFGG யினருக்கு தமது மனமாந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.

இதன் போது உரையாற்றிய பொறியியலளர் அப்துர் ரஹ்மான்,

‘ஜம்இயத்துல் உலமா சபைக்குத் தேவைப்பட்ட இந்த அடிப்படைத் தேவையினை நிறைவு செய்து கொடுக்க முடிந்தமையையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதோடு இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், ஏனைய அமைச்சர்கள், அரசியல் வாதிகள் போலன்றி இவ்வாறான உதவிகளை தமது அமைப்பின் உறுப்பினர்களின் சொந்த நிதிப்பங்களிப்பைக் கொண்டே செய்து வருவதாகவும் எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக செய்வதற்கு விரும்புவதாகவும்’ தெரிவித்தார்.

காத்தான்குடி ஜம்இயத்துல் உலமா சபையின் தலைவர் செயலாளர் மற்றும் முன்னாள் தலைவர் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் NFGGயின் சார்பாக பொறியியலாளர் MM. பழ்லுல் ஹக், MM. அமீரலி ஆசிரியர், முன்னாள் நகர சபை உறுப்பினர்களான SHM. பிர்தௌஸ் (ஆசிரியர்/அதிபர்), MAHM. மிஹ்ழார் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
IMG-20160727-WA0019 IMG-20160727-WA0020 IMG-20160727-WA0021

LEAVE A REPLY