BCAS Campus நிறுவனத்திற்கு லண்டனில் பாராட்டு!

0
44

unnamed (1)அரச பல்கலைக்கழக வாயப்புக்கள் கிடைக்காத மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் BCAS Campus நிறுவனம் வழங்கி வரும் பெறுமதிமிக்க கல்விச் சேவைக்கான பாராட்டு லண்டனில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

Pearson (Edexel UK) நிறுவனத்தினால் அதன் தலைமைக் காரியாலயத்தில் வைத்தே இந்தப் பாராட்டு BCAS Campus இற்கு வழங்கப்பட்டுள்ளது.

BCAS Campus நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களும் அதன் தலைமைப் பீடாதிபதியும் முன்னாள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு(UGC) வின் தலைவருமான பேராசிரியர் ஷானிகா ஹிரும்புரேகம அவர்களும் அண்மையில் பிரித்தானியாவுக்கான உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இவ்விஜயத்தின் ஒரு அங்கமாக Pearson (Edexel UK) நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடனான விசேட சந்திப் பொன்றினை லண்டனில் அமைந்துள்ள Pearson தலைமைக் காரியாலயத்தில் மேற்கொண்டனர். இந்த சந்திப்பின் போதே BCAS Campus இன் பெறுமதிமிக்க கல்விச்சேவைக்கான பாராட்டு Pearson (Edexel UK) நிறுவனத்தினால் வழங்கப்பட்டதோடு இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் விசேட நினைவுப் படிகமும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

Pearson (Edexel UK) நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற BTEC HND பாடநெறிகளானது உலகளாவிய ரீதியில் 350க்கும் மேற்பட்ட பல்கலைக் கழங்களினாலும் உயர் கல்வி நிறுவனங்களினாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற அதேவேளை , இப்பாடநெறிகளை இலங்கையில் வழங்குகின்ற முதல் தர பாரிய கல்வி நிறுவனமாக BCAS Campus திகழ்கின்றது. பல்கலைக்கழக அனுமதிகளுக்கு பாரிய பற்றாக்குறை நிலவும் நமது நாட்டில் வெளிநாட்டுப் பட்டப்படிப்பொன்றை பூர்த்தி செய்வதற்குகந்த செலவு குறைந்த மிகவும் வசதியான உயர் கல்வி வழிமுறையாக BTEC HND பாடநெறிகள் மாத்திரமே திகழ்கின்றன.

இவ்வாறு மாணவர்கள் பூர்த்தி செய்யும் BTEC HND தகைமைகள் பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகளின் 350க்கும் அதிகமான பல்கலைக் கழகங்களினால் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. மாத்திரமின்றி இந்த BTEC HND தகைமைகள் அந்தந்த பல்கலைக் கழகங்களின் பட்டப்படிப்பின் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு சமமானதாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இம்மாணவர்கள் அப்பல்கலைக் கழகங்கள் வழங்கும் பட்டப்படிப்புகளில் இறுதியாண்டுக்கு நேரடியான அனுமதிகளை பெற்றுக்கொள்கின்றன பெறுமதியான வாயப்பும் கிடைக்கின்றது.

BCAS Londonகடந்த 17 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் தனியார் உயர் கல்வித்துறையில் முன்னோடியாகத் திகழும் BCAS Campus நிறுவனமே BTEC HND பாடநெறிகளை இலங்கை மாணவர்கள் மத்தியில் மீளப் அறிமுகம் செய்து பிரபல்யப்படுத்திய ஒரு முன்னோடி உயர் கல்வி நிறுவனமாகும். Pearson (Edexel UK) நிறுவனம் வழங்கி வருகின்ற வழமையான பாடநெறிகளுக்கு அப்பால் இலங்கை மாணவர்களினது எதிர்கால தொழில் சந்தைக்கு மேற்ற பல புதிய பாடநெறிகளையும் BTEC HND தரத்தில் அறிமுகம் செய்து வெற்றி கண்ட பெருமையும் BCAS Campus க்கே உரியது. அந்த வகையில் 2005 ஆம் ஆண்டு BCAS Campus அறிமுகம் செய்த BTEC HND in QS பாடநெறி இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

பல்கலைக் கழக வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளத் தவறிய நமது நூற்றுக்கணக்கான மாணவர்கள் இத்துறையில் பட்டப்படிப்புக்களை மாத்திரமின்றி முதுமானிப்பட்டங்களையும் பூர்த்தி செய்து உலகின் பல நாடுகளிலும் QS துறை தொழில் வல்லுனர்களாக உயர்ந்த தொழில் வாயப்புக்களைப் பெற்றுள்ளனர். இது இலங்கையின் தனியார் உயர் கல்வித்துறை வரலாற்றில் ஏனைய எந்த நிறுவனங்களினாலும் மேற்கொள்ள முடியாது போன ஒரு சாதனையாகும்.

QS துறையைப் போலவே ஏனைய பல்வேறு துறைகளிலும் BTEC HND பாடநெறிகளை வழங்குவதில் BCAS Campus முன்னணியில் திகழ்கின்றது. அந்த வகையில் Computing, Business Mgt, Civil Engineering, Quantity Surveying , Biomedical Science , Telecom Engineering மற்றும் Law ஆகிய துறைகளில் BTEC HND பாடநெறிகளை வழங்குகின்றது.

கொழும்பில் மாத்திரமின்றி நாட்டின் ஏனைய பல பாகங்களிலும் காணப்படும் BCAS Campus வளாகங்களிலும் மாணவர்கள் இப்பாடநெறிகளை தொடர முடியும் . அந்த வகையில் கொழும்பு, கல்கிஸ்ஸை, கண்டி, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள வளாகங்கள் மூலமாக இப்பாட நெறிகள் வழங்கப்படுகின்றன.

unnamed (2)இரண்டு விசேட சிறப்பம்சங்கள்

அத்தோடு மேலும் இரண்டு விசேட காரணங்களுக்காக BCAS Campus வழங்கும் BTEC HND பாடநெறிகள் உயர் மதிப்பைப் பெற்றுள்ளன.

முதலாவதாக, மாணவர்களின் கற்பித்தல் நடவடிக்கைகளில் BCAD Campus முதலீடு செய்யும் கால நேரமும் ஏனைய கற்கை வளங்களும். HND பாடநெறியிலுள்ள ஒவ்வொரு அலகும் தலா 60 மணித்தியாலங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்ற வழிமுறையினை BCAd Campus பின்பற்றுகின்றது. அது போலவே ஒவ்வொரு அலகுகளுக்குமான செய்முறைப் பயிற்சிகளிலும் கணிசமான நேரம் செலவு செய்யப்படுகிறது. இதன் காரணமாக BTEC HND யினை பயிலும் BCAS மாணவர்கள் தமது எதிர்கால தொழில் வெற்றிக்கு அவசியமான துறைசார் அறிவினையும் திறன் விருத்தியினையும் பெற்றுக் கொள்கின்றனர்.

இரண்டாவதாக, UGC இன் முன்னாள் தலைவரும் அதேபோன்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான பேராசிரியர் ஷானிகா ஹிரும்புரேகம அவர்களின் தலைமையில் BCAS Campus கொண்டிருக்கும் மிகத் திறமை வாயந்த முழுநேர விரிவுரையாளர் குழாம். ஏனைய தனியார் நிறுவனங்களோடு ஒப்பிடும் போது மாணவர்கள் BCAS Campus இல் பெற்றுக் கொள்ளும் பல வரப்பிரசாதங்களில் இதுவும் ஒன்றாகும். முறையான பல்கலைக் கழகமொன்றில் கற்பதற்கீடான அனுபவத்தினையும் வாயப்பினையும் இதன் மூலம் மாணவர்கள் பெற்றுக் கொள்ளுகின்றார்கள்.

இந்த சிறப்பம்சங்களுக்காகவே BCAS Campus இற்கான இந்தப் பாராட்டு லண்டணில் வழங்கப்பட்டிருக்கிறது.

மாத்திரமின்றி BCAS பின்பற்றும் முன்மாதிரியான கற்பித்தல் வழிமுறைகள் மற்றும் தர நியமங்கள் என்பவற்றை ஏனைய நாடுகளிலுள்ள Pearson அங்கீகாரமுள்ள நிறுவனங்களுக்கும் வழங்கி வழிகாட்ட வரும்புவதாகவும் இதற்கு BCAS Campus நிறுவனத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் Pearson நிறுவன உயர் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

BTEC HND பாடநெறியினை பூர்த்தி செய்யும் மாணவர்கள் தத்தமது துறைகளில் பட்டப்படிப்பின் இறுதியாண்டினை (Top-Up Degree) இலங்கையிலேயே பூர்த்தி செய்வதற்கான வாயப்புக்களையும் BCAS Campus வழங்குகின்றது. பிரித்தானியாவின் பிரபல பல்கலைக் கழகங்களான University of Wolverhampton மற்றும் London SouthBank University என்பவற்றுடன் இணைந்தே இந்த Top-Up Degree பாட நெறிகள் வழங்கப்படுகின்றன.

BCAS Campus வழங்கும் பாடநெறிகள் தொடர்பான மேலதிக விபரங்களை 077 3 114105 மூலமாக அல்லதுwww.bcas.lk எனும் இணையத்தளத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

LEAVE A REPLY