புணரமைக்கப்பட்ட குளம் திறந்து வைப்பு

0
244

(வாழைச்சேனை நிருபர்)

05நல்லாட்சி அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புணரமைக்கப்பட்ட வெள்ளாமைச்சேனை பெரிய காக்கா குளம் இன்று (27) புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் பதினைந்து லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இக் குளம் புனரமைக்கப்பட்டுள்ளது.

இக் குளம் புணரமைக்கப்பட்டுள்ளதன் மூலம் இப்பகுதியில் உள்ள ஆயிரத்தி ஐநூறு ஏக்கர் விவசாய காணிகளுக்கு பயன் கிடைக்கும் என்று விவசாய திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.

இந் நிகழ்வில் விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் பிரதேச விவசாயிகள் என பலரும்கலந்து கொண்டனர்.

06 03

LEAVE A REPLY