ஒலிம்பிக் போட்டியில் இருந்து ரொஜர் ஃபெடரர் விலகல்

0
99

rogerரியோ ஒலிம்பிக் மற்றும் 2016 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள இதர டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஸ்விட்சர்லாந்தின் ரொஜர் ஃபெடரர் விலகியுள்ளார்.

இது டென்னிஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடற்தகுதி பிரச்சினை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இதற்கு முன்னர் 1999 இல் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸில் காயம் காரணமாக ஃபெடரர் விளையாடவில்லை.

அதன்பிறகு தொடர்ச்சியாக 65 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்றிருந்த ஃபெடரர், சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்தும் விலகினார்.

இப்போது உடற்தகுதி பிரச்சினை காரணமாக ஒலிம்பிக் போட்டி மற்றும் 2016 இன் இதர டென்னிஸ் போட்டிகளில் ஆடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, வருகிற ஒலிம்பிக் போட்டியில் ஸ்விட்சர்லாந்து அணிக்காக விளையாடமாட்டேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் 2016 இல் நடக்கும் இதர போட்டிகளிலும் கலந்துகொள்ளமாட்டேன். நல்ல உடற்தகுதியுடன் 2017 இல் களமிறங்குவேன்.
என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY