சிரியா இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழப்பு 44 ஆக உயர்வு

0
105

201607271957071096_IS-says-its-behind-attack-that-killed-44-in-northern-Syria_SECVPF (1)வடக்கு சிரியாவில் உள்ள காமிஷ்லி நகரில் குர்திஷ் போராளிகளின் தலைமை முகாம் மீது லாரியில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை ஏற்றி வந்த தற்கொலைப்படை தீவிரவாதி மோதி வெடிக்கச் செய்தான். அதன்பின்னர் சில நிமிடங்களில் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதியும் வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.

அடுத்தடுத்து நடந்த இந்த தாக்குதல் காரணமாக அப்பகுதியில் உள்ள பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன. வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. புகை மண்டலத்துக்கு மத்தியில் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த தாக்குதல்களில் 31 பேர் பலியானதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் இறந்ததையடுத்து உயிரிழப்பு 44 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இதற்கு முன்பும் குர்திஷ் பகுதிகளில் பல்வேறு குண்டுவெடிப்பை ஐ.எஸ். அமைப்பு நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் நடத்தப்பட்ட குவாமிஷ்லி பகுதி துருக்கி எல்லையில் அமைந்துள்ளது. இதன் பெரும்பாலான பகுதிகள் குர்திஷ் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால், நகரின் விமான நிலையம் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

LEAVE A REPLY