திருகோணமலை: சுகாதாரத்துறையில் புரட்சி, ஹக்கீம் ஆரம்பித்து வைப்பு — அமைச்சர் நசீர்

0
144

(சப்னி அஹமட்)

8bb1d057-4432-48fc-b017-731fdc1d0389ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் எதிர்வரும் ஞயிற்றுக் கிழமை (31) திருகோணமலை மாவட்டத்தின் சுகாதார திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் முகமாகவும், சுகாதார அமைச்சினால் நிர்மானிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது என கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், நன்னடைத்தை மற்றும் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நசீர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அன்றைய நிகழ்வுகள் யாவும் காலை 9.௦௦ மணிக்கு ஆரம்பமாகவுள்ளது, ஆரம்பிக்கவுள்ள சேவைகள், தோப்பூர் ஆயுர்வேத வைத்தியசாலையின் அடிக்கல் நாட்டு நிகழ்வு, மூதூர் அறபா நகர் ஆயுர்வேத மத்திய மருந்தகம் திறப்புவிழாவும், அத்தோடு அறபா நகர் அம்மன் நகர் பிரதான வீதி நிர்மானப் பனிக்கான ஆரம்ப வைபவமும், மூதூர் தக்வா நகர் கிராமோதய மத்திய மருந்தகத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, மூதூர் தள வைத்தியசாலையின் நோயாளர் விடுதி திறப்பும், மூதூர் தள வைத்தியசாலைக்கான X-Ray இயந்திரம் கையளிப்பும், வைத்திய நிபுணர்கள், தாதியர்கள் விடுதிக்கான அடிக்கல் நாட்டல், கிண்ணியா தள வைத்தியசாலையின் நோயாளர் விடுதி திறப்பு, திருகோணமலை புல்மோட்டை தள வைத்தியசாலைக்கான வைத்திய நோயாளர் விடுதி திறப்பு மற்றும் ஆயுள் வேத வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா என பல சேவைகளை ஆரம்பிக்கும் நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் என தெரிவித்தார்.

இதன் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுபினர்களான சட்டத்தரணி ஜே.எம்.லாகிர், அன்வர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்கள், உயர் அதிகாரிகள், பணிப்பாளார்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னால் உள்ளுராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொள்ள உள்ளார்கள்.

LEAVE A REPLY