(M.T. ஹைதர் அலி)
திருமலை மாவட்டத்தின், புல்மோட்டை ரகுமான் நகர் வீதி மகனேகும வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 12 மில்லியன் ரூபாய் செலவில் காபட் வீதீயாக மாற்றம் பெறுவதற்கானே வேலைகள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கின் நிதி ஒதுக்கீட்டில் இன்று (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கபட்டன.
குறித்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், முன்னாள் தவிசாளர் முபாரக், பிரதேச சபை உறுப்பினர் ஆசிக், பள்ளிவாயலின் தலைவர் மனாப் மற்றும் பிரதேச மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.