நர்சிங்யாதவ் உணவில் ஊக்க மருந்து கலப்பு: சக மல்யுத்த வீரர் மீது புகார்

0
93

201607271214169900_Junior-Wrestler-Accused-Of-Mixing-Drugs-In-Narsingh-Yadavs_SECVPFமல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஊக்க மருந்து பயன்படுத்தியதால் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக பிரவீன் ராணா ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறார்.

இந்த நிலையில் நர்சிங் யாதவை திட்டமிட்டு சிக்க வைக்கும் விதமாக அவரது உணவில் ஊக்க மருந்து கலக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

சோனிபட்டில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் அவரது உணவில் ஊக்க மருந்து கலக்கப்பட்டதாக இந்திய மல்யுத்த சங்க தலைவர் பிரிவூபூசன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த ஊக்க மருந்தை கலந்தது யார் என்றும் தெரிய வந்துள்ளது. அவர் ஒரு ஜூனியர் மல்யுத்த வீரர். அவரது சகோதரர் சர்வதேச மல்யுத்த வீரர் ஆவார். சூப்பர் வெயிட் பிரிவில் அவர் பங்கேற்கிறார். இந்திய விளையாட்டு ஆணைய மையத்தின் சமையல்காரர் மற்றும் ஊழியர்கள் தான் குற்றவாளியை அடையாளம் கண்டதாக இந்திய மல்யுத்த சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மல்யுத்த வீரர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த ஊக்க மருந்து சர்ச்சை விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று நர்சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY