இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 203 ரன்னில் ஆட்டமிழப்பு

0
85

201607271726198945_first-Test-match-against-Sri-Lanka-Australia-scores-203-runs_SECVPF (1)ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பல்லேகெலேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 117 ரன்னில் சுருண்டது. ஹசில்வுட், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஸ்டார்க், ஓ’கீபே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 203 ரன்களில் ஆட்டமிழந்தது. அந்த அணித்தரப்பில் ஆடம் வோகஸ் அதிகப்பட்சமாக 47 ரன்கள் எடுத்தார். கேப்டன் சுமித் 30 ரன்கள் எடுத்தார். இலங்கை பந்து வீச்சாளர்களில் ரங்கானா ஹெராத் மற்றும் லாக்‌ஷன் சந்தகன் தலா நான்கு விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

86 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, ஒரு விக்கெட்டை இழந்து 6 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டுள்ளது.

LEAVE A REPLY