(Poem) பாத யாத்திரை

0
85

(Mohamed Nizous)

கோத்திர குல பேதம் கொண்டு ஆண்டவர்
சாத்திர கதையால் சகலதும் இழந்தவர்
ஆத்திரம் கொண்டு அரசுக்கெதிராய்
யாத்திரை செல்கிறார் யாருக்கு லாபம்

பேதங்கள் வளர்த்தவர் பிரச்சினை கொடுத்தவர்
வேதங்கள் எரிக்க விராதை அழைத்தவர்
பாதகம் செய்தவர் பள்ளியை உடைத்தவர்
பாதங்கள் தேய பயணம் செல்கிறார்

அதிகாரம் முழுக்க அவர் கையில் இருந்தும்
அதனைக் காக்க அப்பவே முடியல்ல
எதுவுமே இப்ப இவர் கையில் இல்லை
எதிர்த்து நிற்கிறார் எதனைக் கிழிக்க

நல்லாட்சி இங்கே நாக்கை வழிப்பதால்
கள்ளர்கள் புகுந்து கலாய்க்கப் பார்க்கிறார்
சொல்லாட்சியில் மட்டும் நல்லாட்சி நடப்பதால்
உள்ளதோ நன்மை எல்லோரும் கேட்கிறார்

போட்ட திட்டங்கள் புழுதியில் படுக்குது
ஆட்டயப் போட்டவர் ஆடித் திரிகிறார்
கூட்டுறார் குறைக்கிறார் குழப்புறார் VATல்
கோட்டை சரியலாம் குறி பார்த்தடித்தால்

சால்வையின் குடும்பத்தை சார்ந்தவர் அன்றி
ஆளொன்று சரியாய் அணுகினால் ஆட்சி
வீழும் நிலையே விளங்குது இங்கே
சூழலை கணித்து சொன்னேன் வரிகளில்

LEAVE A REPLY