நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் விஜயம்

0
157

(வாழைச்சேனை நிரபர், M.T. ஹைதர் அலி)

DSC_3051கல்குடாத் தொகுதியின், நாவலடி பிரதேசத்தில் அமைந்துள்ள ஆயுர்வேத மத்திய மருந்தகத்திற்கு நேற்று (26) செவ்வாய்க் கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

வைத்தியசாலையில் நிலவும் ஆளணி பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறை போன்ற விடயங்களை ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் பொறுப்பதிகாரி டொக்டர் றிக்காஸ், மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்கிடம் தெளிவாக ஆவணங்களுடன் சுட்டிக்காட்டியதோடு, இவ்வைத்தியசாலையில் நோயளர் விடுதி அமைப்பதற்குரிய தேவைப்பாடுகளையும் தெளிவுபடுத்தினார்.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்ட மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக், மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நஸீர் அஹமட் மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் ஆகியோரை தொடர்புகொண்டு இவ்வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை தெரியப்படுத்தி நோயளர் விடுதி அமைப்பதற்குரிய முயற்சியகளையும் மேற்கொள்வதாக தெரிவித்தார். இறுதியாக வைத்தியசாலை மற்றும் வளாகத்தினையும் பார்வையிட்டார்.

Navalady hos

LEAVE A REPLY