காத்தான்குடியில் போதை மாத்திரை வைத்திருந்த இளைஞர் கைது

0
209

(விஷேட நிருபர்)

Arrested kkyகாத்தான்குடி பொலிஸ் பிரிவில் போதை மாத்திரை வைத்திருந்த இளைஞர் ஒருவரை நேற்று (26) செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பெலிசார் தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடியிலுள்ள வீதி ஒன்றில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை வழிமறித்து திடீர் சோதரனை செய்த காத்தான்குடி பொலிசார், குறித்த இளைஞரிடமிருந்து 3 போதை மாத்திரைகளை கைப்பற்றியதுடன் குறித்த இளைஞரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரையும் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (27) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY