(Video) கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டு நகரில் ஆர்ப்பாட்டம்

0
31

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

treகிழக்கு பல்கலைக் கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீட மாணவர்கள் இன்று (27) புதன்கிழமை சில கோரிக்கைகளை வலியுறுத்தி சௌக்கிய பராமரிப்பு பீட வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்காக அமைக்கப்படும் விரிவுரை மண்டபம் இதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லையெனவும் வைத்தியர்களுக்கான பயிற்சி உபகரணங்கள் பற்றாக்குறை மற்றும் மாணவர்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லையெனவும் கூறியே இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இது தொடர்பில் பல்வேறு தடவைகள் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றபோதிலும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனவும் இதில் கலந்து கொண்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரம், காந்தி பூங்காவரை பேரணியாக நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திலும் கவனயீர்ப்பு பேரணியிலும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தினை சேர்ந்த சுமார் 300 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Video: Mohamed ilham

1 3 5 6

tr

LEAVE A REPLY