மும்பை விமான நிலையத்தில் எமிரேட்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

0
89

201607261651308924_Emirates-flight-makes-emergency-landing-at-Mumbai-airport_SECVPFதுபாயில் இருந்து மலேவுக்கு 309 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற எமிரேட்ஸ் விமானம், அவசரமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, புகை வெளிப்பட்டது. இதனால், விமானி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறைக்க அனுமதிகேட்டார்.

அனுமதி கிடைத்ததும் மும்பை விமான நிலையத்தின் 9-வது ஓடுதளத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் பத்திரமாக மீட்கபட்டனர். உரிய நேரத்தில் விமானத்தில் புகை வெளியானது கண்டறியப்பட்டு தரையிறக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் புகை வெளிப்பட்டதற்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இந்த சம்பவம் குறித்து கருத்து கேட்டறிய எமிரேட்ஸ் விமான நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.

LEAVE A REPLY