வெளியானது Samsung Galaxy J2 Pro ஸ்மார்ட் போன்

0
168

gsmarena_001Samsung நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் போனான Galaxy J2 Proவை இந்தியாவில் அறிமுகப்பட்டுத்தியுள்ளது.

சமீபத்தில் Galaxy J2 என்ற ஒரு ஸ்மார்ட்போனை Samsung நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து Galaxy J2 Pro என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது.

கருப்பு, தங்க மற்றும் வெள்ளி நிறங்களில் இந்த போன் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பின்பக்கத்தில் கமெரா லென்சில் ஒளிரும் விளக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

2GB RAM, 16 GB உள்ளடிக்கிய சேமிப்பு மற்றும் மெமரி கார்டு மூலம் சேமிப்பு பகுதியையும் நீடித்து கொள்ளலாம்.

மேலும், இதில் கொடுக்கப்பட்டுள்ள Turbo Speed தொழிநுட்பம் போனில் உள்ள ஆப்பிளிகேஷன்களை 40 சதவீதம் வரை வேகமாக இயங்க உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, இதில் 2600mAh பேட்டரி, dual-SIM ,5 இன்ச் பெரிய தொடுதிரை, 5 mp முன்பக்க கமெரா, 8 mp பின்பக்க கமெரா கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.9,890 விலை கொண்ட இந்த போன் இன்று முதல் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வருகிறது.

LEAVE A REPLY