புதிய அம்சங்களுடன் அறிமுகமாகும் கூகுள் மேப்பின் புதிய பதிப்பு!

0
126

google-maps-new-interface1கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட பல்வேறு சேவைகளுள் கூகுள் மேப் சேவையும் ஒன்றாகும். இன்று உலகளாவிய ரீதியில் பல மில்லியன் பயனர்களால் இவ் வசதி பயன்படுத்தப்படுகின்றது.

இதனைக் கருத்திற் கொண்டு தனது பயனர்களுக்கான சேவையினை கூகுள் நிறுவனம் இலகு படுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கூகுள் மேப் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை அறிமுகம் செய்கின்றது.

இப் புதிய பதிப்பில் சில புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அவற்றில் பிரதானமாக WiFi Only Mode வசதி தரப்பட்டுள்ளது.

இவ் வசதியின் ஊடாக மொபைல் சேவை வழங்குனர் ஊடாக டேட்டா வீண் விரயமாவது தடுக்கப்படுகின்றது.

இது தவிர போக்குவரத்து தொடர்பாக ஏற்படும் தாமதங்களுக்கான காரணங்களையும் உடனுக்கு உடன் தெரிந்துகொள்ளும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது தற்போது அன்ரோயிட் சாதனங்களுக்காக மட்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

LEAVE A REPLY