330 ரன் வித்தியாசத்தில் தோல்வி

0
137

201607261725524604_Pakistan-batting-has-been-unmasked-at-Old-Trafford-says_SECVPFபாகிஸ்தான்- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஓல்டு டிராஃப்போர்டில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 330 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்தது.

இங்கிலாந்து அணிக்கு எந்த வகையிலும் பாகிஸ்தான் நெருக்கடி கொடுக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் நான்கு நாட்களிலேயே முடிவடைந்தது.

இதனால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கடுமையாக சாடியுள்ளார்.

மோசமான தோல்வி குறித்து அக்தர் கூறுகையில் ‘‘போட்டி முழுவதும் எந்தவொரு திட்டமும் வகுக்கப்படவில்லை என்பதை பாகிஸ்தான் வீரர்களிடம் பார்க்க முடிந்தது. முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட பேட்டிங் இங்கிலாந்து பந்து வீச்சுக்கு எதிராக முற்றிலும் மோசமாக அமைந்துவிட்டது.

பவுன்சரை தவிர மற்ற ஏதும் (ஸ்விங் மற்றும் டர்ன்) இல்லாத இந்த ஆடுகளத்தி்ல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் முகத்திரை கிழிந்ததாகவே கூறலாம். நம்முடைய பேட்டிங் இதுபோன்ற ஆடுகளத்தில் எப்பொழுதும் திண்டாடத்தான் செய்கிறது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆடுகளத்தில் ஏன் கடுமையாக விளையாடுவதில்லை?

அதேபோல் ஓல்டு டிராஃப்போர்டில் எப்படி பந்து வீச வேண்டும் என்ற போட்டிக்கான திட்டமும் இல்லாமல் போனது. பந்து வீச்சாளர்களுக்கு லைன் சரியாக அமையவில்லை. அதேபோல் இங்கிலாந்து அணிக்கெதிரான நோக்கத்தையும் காணவில்லை. இந்த தோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக கடினமான வழியைத் தேடவேண்டும்’’ என்றார்.

LEAVE A REPLY