ஜனவரி முதல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தற்காலிகமாக பூட்டு

0
148

Katunayake-image-1கட்டுநாயக்கவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அடுத்த வருட ஜனவரி மாதம் முதல், தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி 5ம் திகதி தொடக்கம் மூன்று மாதங்களுக்கு தினமும் காலை 08.30 முதல் மாலை 04.30 வரை, எட்டு மணித்தியாலங்கள், விமான நிலையம் இவ்வாறு மூடப்படவுள்ளதாக, அமைச்சர் சிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

விமான ஓடுபாதையின் திருத்தப் பணிகள் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதேவேளை, ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், ரயில் கட்டணங்களும் அதிகரிக்கப்படுமா என, இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கு “இதுவரை அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை” என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY