(Flash) மஞ்சந்தொடுவாயில் ஆயுதம் வைத்திருந்த அப்துல் மஜீதுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை

0
98

(விஷெட நிருபர்)

court judgementsகாத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் ஆயுதம் வைத்திருந்த ஒருவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (25) திங்கட்கிழமை இவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

கடந்த 2009ம் ஆண்டு மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் முதியோர் இல்ல வீதியில் வசிக்கும் கே.எம்.அப்துல் மஜீட் (36) என்பவர் ஆயுதங்கள் வைத்திருந்ததாக பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

இவரிடமிருந்து ரி.56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 29 துப்பாக்கி ரவைகளையும் பொலிசார் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து விளக்க மறியலில் இருந்து வந்த மேற்படி சந்தேக நபர் பத்து மாதங்களின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து இடம் பெற்று வந்த நிலையில் நேற்று (25) திங்கட்கிழமையன்று இவருக்கு ஆயுல் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணி இவருக்கு ஆயுல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பையடுத்து நீதிமன்றத்திற்கு சமூமளித்திருந்த ஆயுல் தண்டனைக்குள்ளாக்கப்பட்ட கே.எம்.அப்துல் மஜீட் என்பவரை மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.

மேற்படி எம். அப்துல் மஜீட் மூன்று பிள்ளைகளின் தந்தையான ஒரு குடும்பஸ்தர் என்பதும் இவர் மீன்பிடி தொழில் ஈடுபட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY