காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சீட்டுப்பணத்தில் போலி நாணயத்தால் ஒன்றை வைத்துக் கொடுத்த பெண் ஒருவர் கைது!

0
129

(விசேட நிருபர்)

Arrested kkyகாத்தான்குடி பொலிஸ் பிரிவில் சீட்டுப்பணத்தில் போலி நாணயத்தால் ஒன்றை வைத்துக் கொடுத்த பெண் ஒருவரை காத்தான்குடி பொலிசார் நேற்று (25) கைது செய்துள்ளனர்.

புதிய காத்தான்குடி நூறானியா வீதியில் சீட்டுப் பிடிக்கும் பெண்ணொருவரிடம் சீட்டுப்பணத்திணை செலுத்தி வந்த அவ்வீதியில் வசிக்கும் மற்றொரு பெண்ணொருவர் நேற்றுக் காலை தனது சீட்டுப்பணத்துடன் போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்றையும் வைத்து கொடுத்துள்ளார்.

சீட்டுப்பிடிக்கும் அந்த பெண்ணிடம் கொடுத்த சீட்டுப்பணத்தை சீட்டுக்காரியான அப் பெண் பரிசோதனை செய்த போது, ஒரு ஆயிரம் ரூபா நாணயத்தாள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சீட்டுப்பிடிக்கும் குறித்த பெண் அயலவர்களை அழைத்து வீட்டுக்கு முன்னாலுள்ள வீதியில் வைத்து இந்த போலி நாணயத்தாலை காட்டிக் கொண்டு இந்த பணத்தினை பாத்துக் கொண்டு நின்ற போது அந்த வீதியினால் சென்ற காத்தான்குடி பொலிசார் பெண்கள் கூட்டமாக நிற்பதைக் கண்டு விசாரணை செய்துள்ளனர்.

இது விடயம் பொலிசாருக்கும் தெரியவே குறித்த போலி நாணயத்தாலை வழங்கிய பெண்ணை கைது செய்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததுடன் அவர் வழங்கிய ஆயிரம் ரூபா போலி நாணயத்தாலையும் கைப்பற்றினர்.

பின்னர் பொலிசார் குறித்த பெண்ணை விசாரணையின் பின்னர் விடுதலை செய்ததுடன் இது பற்றி விசாரணைகளை தொடர்ந்தும் நடாத்தி வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY