மட்டக்களப்பில் இடம்பெற்ற முக்கொலையில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை நிறைவு

0
85

battiமட்டக்களப்பு காக்காச்சிவட்டை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட மூவரின் பிரேத பரிசோதனை அறிக்கை நிறைவடைந்துள்ளது

கடுமையான தாக்குதலினால் தலையில் ஏற்பட்ட காயங்களே மூவரின் மரணத்துக்கும் காரணமாய் அமைந்துள்ளமை பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற முக்கொலையில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை நேற்று (25) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இதேவேளை முக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

உயிரழந்த பெண்ணின் 24 வயதான கணவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஒன்றரை வயது பெண் குழந்தை ,குழந்தையின் தாயான 24 வயதுடைய பெண் மற்றும் பெண்ணின் 55 வயதான தந்தை ஆகியோர் நேற்றுமுன்தினம் அதிகாலை கொலை செய்யப்பட்டிருந்தனர்.

ஒன்றரை வயது குழந்தை மற்றும் பெண் ஆகியோரது சடலங்கள் காக்காச்சிவட்டை பகுதியிலுள்ள வீட்டின் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன.

-NF-

LEAVE A REPLY