(poem) நினைத்ததெல்லாம் ..நடந்து விட்டால்

0
161

(நிஷவ்ஸ்)

நினைத்த விலை சொல்லுகிறார் பெரிய மார்கட்டிலே
நடந்த கதை பல உண்டு
நல்லவர் ஏமாந்தார்.
விலை கூட்டி விற்பதற்கும்
விமர்சனம் உண்டெனினும்
நிலை மறந்து ஏமாற்றல்
நிச்சயம் நரகம் தரும்
இந்த மீன்கள் புதிது
இப்ப பிடித்தோம் என்பார்
அந்த மீனை ஆக்கிப் பார்த்தால்
அதன் பின் புரியும் ஏமாற்றம்.
அடுத்த மீனின் இரத்தத்தை
அழுகிய மீனின் பூவினிலே
எடுத்துப் பூசி இவர் விற்பார்
இதுதான் புது மீன் என்பார்.
அழுகிய பழத்தைப் புரட்டி
அழகாய் அடுக்கி வைப்பார்
பழகிப் பேசி பழத்தைக் கொடுப்பார்
பாவம் புண்ணியம் பார்க்காமல்.
மொழு மொழெண்ணு வாழைப் பழம்
முத்திப் பழுத்தது என்றிடுவார்.
வெளியே மட்டும் பழுத்திருக்கும்
உள்ளே வெறும் பிஞ்சு.
தடாரெனப் தூக்கிப் போட
தட்டு கீழே பணியும்.
உடனே கவிழ்த்து
ஒரு பேக்கில் போட்டு
மரக்கறி நிறுப்பார் குறைவாக.
பட படண்ணு கூட்டும் போது
பத்து இருபதை சும்மா சேர்ப்பார்.
அட இதெல்லாம் யாவார
அணுகு முறைகள் என்று சொல்வார்.
வெற்றிலைப் பகளி நடுவே
வெளுறிய வெற்றிலை இருக்கும்.
முற்றிய வெண்டியை முறிப்பார் சரியாய்
சத்தியம் செய்வார் பிஞ்சு என்று.
விற்ற பொருள் மாற்றச் சொன்னால்
வீறாய்ப்பாக ஏசிடுவார்
நட்டத்துக்கு கொடுப்பதாக
நமக்குப் படங்கள் காட்டிடுவார்.
நல்லவர் பலபேர் உண்டு -அவர்
நாணயம் பேணி விற்பார்.
கள்ளர்கள் சில பேர் கலந்து அங்கு
உள்ளதைக் கெடுப்பார் உருப்படார்கள்.
அல்லாஹ்வுக்கு பயம் இருந்தால்
அடுத்த மனிதரை ஏமாற்றார்.
இல்லையென்றால் என்ன செய்ய
இருப்பார் நரகத்திலே.

LEAVE A REPLY