பாகிஸ்தானுடனான 2 ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

0
173

pakistan-englandபாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 330 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

மன்செஸ்டர் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 8 விக்கெட் இழப்புக்கு 589 ஓட்டங்களைக் குவித்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸை நிறுத்திக் கொண்டது.

பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 198 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது துடுப்பாட்டத்தை நிறுத்தியது.

அதையடுத்து இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு 565 ஓட்டங்கள் தேவையான நிலையில் பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை நேற்று ஆரம்பித்தது. எனினும் போட்டியின் 4 ஆவது நாளான இன்று 234 ஓட்டங்களுடன் அவ்வணியின் சகல விக்கெட்களும் வீழ்ந்தன.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் ஜேம்ஸ் அண்டர்சன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மோயின் அலி 88 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஜோ ரூட் தெரிவானார். 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தற்போது இரு அணிகளும் 1:1 விகிதத்தில் சமநிலையில் உள்ளன.

#MetroNews

LEAVE A REPLY