வக்பு சட்டத்தில் திருத்தங்கள்: முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம்

0
1114

Minister haleemவக்பு செய்­யப்­பட்­டுள்ள முஸ்லிம் சமூ­கத்­துக்­கு­ரித்­தான வக்பு சொத்­துக்­களை முறை­யாகப் பாது­காத்து அவற்றை முகா­மைத்­துவம் செய்­வதில் உள்ள குறை­பா­டு­களை இல்­லாமற் செய்­வ­தற்கு உதவும் வகையில் வக்பு சட்­டத்தில் சில திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­வ­தாக முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பாக சட்­டத்­த­ர­ணி­க­ளி­னதும், உல­மாக்­க­ளி­னதும் ஆலோ­ச­னைகள் இதற்­காகப் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

அதன் பின்பு அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்டு அங்­கீ­காரம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட பின்பு பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்டு சட்­ட­மாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­மெ­னவும் அவர் கூறினார்.

பெரும்­பா­லான வக்பு சொத்­துகள் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளினால் எவ்­வி­த­மான உடன்­ப­டிக்­கை­களும் செய்து கொள்­ளப்­ப­டாமல் வாட­கைக்கும், நீண்­ட­கால குத்­த­கைக்கும் விடப்­பட்­டுள்­ளன.

மிகக் குறைந்த கட்­ட­ணத்­துக்கு வாட­கைக்கும், குத்­த­கைக்கும் விடப்­பட்­டுள்­ள­தாக முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன.

எனவே உடன்­ப­டிக்­கைகள் எதுவும் இல்­லாமல் வாட­கைக்கும் குத்­த­கைக்கும் விடப்­பட்­டுள்ள வக்பு சொத்­து­க­ளுக்­கான உடன்­ப­டிக்­கை­களை கைச்­சாத்­திட்டுக் கொள்­வ­தற்கு பள்­ளி­வாசல் நிர்­வாகம் தாம­தி­யாது உடன் செயற்­ப­ட­வேண்­டு­மெ­னவும் அமைச்சர் ஹலீம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

இதே­வேளை வக்­பு­ச­பையின் செயற்­பா­டு­களை மேலும் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கான சில பரிந்­து­ரை­களை அமைச்சர் ஹலீ­மிடம் முன்­வைத்­துள்­ள­தாக வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம். எம். யாசீன் தெரி­வித்தார்.

வக்பு சொத்துகள் முறையற்ற வகையில் கையாளப்படுகின்றமை மற்றும் ஊழல்கள் தொடர்பில் அதிகமான முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து வக்பு சபைக்கு கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#Vidivelli

LEAVE A REPLY