துருக்கியில் 40க்கும் மேற்பட்ட செய்தியாளர்களை கைது செய்ய உத்தரவு

0
114

160718140202_turke_2946000hதுருக்கியில் 40க்கும் மேற்பட்ட செய்தியாளர்களைக் கைது செய்ய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கைது பட்டியலில், துருக்கியின் முன்னணி வர்ணனையாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸ்லி லிகக் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், துருக்கியில் தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பிறகு ஆயிரக்கணக்கான கைது நடந்தன.

கடந்த ஞாயிறன்று, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்தான்புல்லில் உள்ள டக்ஸிம் சதுக்கத்தில் அனைத்து கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.

துருக்கியில் மீண்டும் மரண தண்டனை கொண்டு வரப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி உறுப்பினராக சேர நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜீன் கிளாட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY