பாக்தாத்தில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு 11 பேர் பலி

0
92

bomb_2945850fஇராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தின் வடக்குப் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) நடந்த கார் குண்டுவெடிப்பு தற்கொலைப் படை தாக்குதலில் 11 பேர் பலியாகினர், 35 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாக்தாத்திலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காலிஸ் நகரில், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட காரிலிருந்த குண்டு வெடித்ததில் போலீஸார் 6 பேர் உட்பட 11 பேர் பலியாகியுள்ளனர்.

முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இராக்கின் பரப்பரப்பான வர்த்தக பகுதியான கதிமியாவில் மக்கள் கூட்டம் நிறைந்த வீதிகளில் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட காரிலிருந்த குண்டு வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இக்குண்டுவெடிப்பு சம்பவத்தில் 14 பேர் பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்ற நிலையில் இன்றைய சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

அடுத்தடுத்து இரண்டு நாட்களில் 2 குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளதால் பாக்தாத் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY