தகவலறியும் சட்டமூலத்தை அமுல்படுத்துவது பற்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மாவட்ட இணைப்பாளர்களுக்கு விழிப்புணர்வு

0
92

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

057155e4-c817-4e7d-94b2-ad04143508dbஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்திருந்த அதன் மாவட்ட இணைப்பாளர்களுக்கான கூட்டமும் தகவலறியும் சட்டமூலம்பற்றிய செயலமர்வும் கொழும்பு மாளிகாகந்த அல் ஷபாப் கேட்போர் கூடத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்றது.

செயலமர்வில் தகவலறியும் சட்ட மூலம் பற்றிய விளக்கமும் அதனை அமுல்படுத்துவதற்குத் தோதான வழிவகைளும் பற்றிய விழிப்புணர்வு அரசாங்க தகவல் திணைக்கள பதில் பணிப்பாளர் எம். அலி ஹஸன் அவர்களால் வழங்கப்பட்டது.

தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் தகவலறியும் சட்டமூலத்தின் பலாபலன்களை சிவில் சமூகத்திற்குக் கிட்டச் செய்யும் வகையில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் வாயிலாக நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான கருத்துக்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

மேலும் எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் தொடர்பான தீர்மானங்களும் இணைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டன.

LEAVE A REPLY