ரஷிய வீராங்கனை யூலியா ஸ்டெப்பநோவா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள தடை

0
90

160701102133_yulia_2945035hரஷிய தடகள போட்டிகளில் ஊக்க மருந்து சோதனை மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ரஷிய வீராங்கனை யூலியா ஸ்டெப்பநோவா, ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்க முடியாது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

அதே சமயம், ஊக்க மருந்திற்கு எதிராக போராடி, விளையாட்டில் நேர்மையை கடைபிடித்த 800 மீட்டர் ஓட்டப் பந்தய வீரங்கனையான யூலியா ஸ்டெப்பநோவாவின் அர்பணிப்புகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பாராட்டி உள்ளது.

ஆனால், முன்னர் ஊக்க மருந்தை அவர் பழகியதை ஒப்புக் கொண்டுள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தேவையான நெறிமுறைகளை அவர் பூர்த்தி செய்யவில்லை என கூறியுள்ளது

LEAVE A REPLY