ஆசிரியர்களுக்கு பல்மட்டக் கற்பித்தல் தொடர்பான செயலமர்வு

0
237

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வழிகாட்டலில் சம்மாந்துறை கல்வி வலயத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு பல்மட்டக் கற்பித்தல் தொடர்பான இருநாள் செயலமர்வு கடந்த வார இறுதி நாட்களில் சம்மாந்துறை வலயக் கல்வி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

யுனிசெப் நிறுவனம் இதற்கு நிதி அனுசரணை வழங்கியிருந்தது.

இந்த செயலமர்வில் நாவின்வெளி சம்மாந்தறை இறக்காமம் ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 35 ஆசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர்.

செயலமர்வின்போது மாணவர்களைக் கொண்டு பல ஆற்றல்களை வெளிப்படுத்தும் செயன்முறைப் பிரயோகப் பயிற்சிகளும் இடம்பெற்றன.

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எஸ். நஜீம், ஆரம்பக் கல்விக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல். அப்துல் கபூர், வளவாளர்களான திருக்கோவில் கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்விக்குப் பொறப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. சர்மா, அக்கரைப்பற்று வலய ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல் மன்சூர் சம்மாந்துறை வலயத்தில் உள்ள ஆசிரிய ஆலோசகர்களான அப்துல் அஸீஸ். கே. அற்புதராசா கெப்சோ இணைப்பாளர் ஏ.எல்.ஏ முஹம்மத் மற்றும் பயனாளிகளான ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

532dbe89-416c-479e-8d31-841009218d0e

b135e355-41b8-4092-b581-de85368cb1f2

LEAVE A REPLY