காத்தான்குடியில் இரு மாணவர்கள் மீது தாக்குதல்: ஒருவர் கைது

0
146

(விசேட நிருபர்)

Arrested kkyகாத்தான்குடியில் பாடசாலை மாணவர்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

நேற்றிரவு (24) காத்தான்குடி பதுறியா வீதியில் வைத்து பாடசாலை மாணவர்கள் இருவரை ஏழு பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இம்மாணவர்கள் வீதியினால் சென்ற போது வழி மறித்து தாக்கப்பட்டுள்ளனர். 

காயங்களுக்குள்ளான இவ்விரு மாணவர்களும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தராதர சாதரணதர வகுப்பில் கல்வி கற்கும் காத்தான்குடி 5ம் குறிச்சியைச் சேர்ந்த எம்.ஏ.அஸீப்(17) எச்.எம்.அர்ஸாத்(17) ஆகிய இரண்டு மாணவர்களும் இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் எம்.ஜெப்ரீஸ் என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY