அம்பாரை மாவட்ட எல்லை நிர்ணய மீளாய்வுக் கூட்டம்

0
196

(எம்.ஜே.எம்.சஜீத்)

DSC01329அம்பாரை மாவட்ட எல்லை நிர்ணய மீளாய்வுக் கூட்டம் நேற்று (24) அம்பாரை மாவட்ட கச்சேரி கூட்ட மண்டபத்தில் தேசிய எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் தலைவர் அஷோகா பீரிஸ் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் அம்பாரை மாவட்டத்திலுள்ள பிரதேசங்களில் நிர்ணயம் செய்யப்பட்ட எல்லைகள் தொடர்பாக ஒவ்வொரு பிரதேசமாக பரீசீலனை செய்யப்பட்டு அரசியல் கட்சி மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களின கருத்துக்களும் பெறப்பட்டது.சில பிரதேசங்களின் எல்லைகள் இணைப்பது தொடர்பாகவும் கருத்துக்களும் தேசிய எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் கவனத்திற்கு முன் வைக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் துசித்த வணிக சிங்க, சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம், பாரளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மன்ஜூல பொர்னாண்டோ, பிரதேச செயலாளர்கள் உட்பட தேசிய எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு மற்றும் தொழிநுட்பக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

DSC01318 DSC01320 DSC01321 DSC01331 DSC01346 DSC01349

LEAVE A REPLY