ரஷியாவுக்கு முழுமையாக தடை விதிக்க சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் மறுப்பு

0
145

201607250908305487_International-Olympic-Council-refuses-Russia-completely-ban_SECVPFரஷிய தடகள வீரர், வீராங்கனைகளில் பலர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய போதிலும், அந்த நாட்டு அரசு அதை கண்டு கொள்ளவில்லை. ஊக்கமருந்து பயன்படுத்த ரஷிய அரசும், அதன் விளையாட்டு அமைப்புகளும் உறுதுணையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் கடும் அதிருப்தி அடைந்த சர்வதேச தடகள சம்மேளனம், தனிநபர் விசாரணை கமிஷனின் தீர்ப்பு அடிப்படையில் ரஷிய தடகள வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இடைக்கால தடை விதித்தது.

ஊக்கமருந்து விவகாரத்தில் ரஷியாவுக்கு முழுமையாக பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் வலியுறுத்தின. இது பற்றி நேற்று ஆலோசித்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில், ரஷியாவுக்கு முழுமையாக தடை விதிக்க மறுத்து விட்டது.

அதே சமயம் அந்த நாட்டின் ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளை போட்டியில் பங்கேற்க அனுமதி அளிப்பது குறித்து சம்பந்தப்பட்ட சர்வதேச விளையாட்டு அமைப்புகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் ஒலிம்பிக் கவுன்சில் தெளிவுப்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் கவுன்சிலின் முடிவால் ரஷிய வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

LEAVE A REPLY