காத்தான்குடி மீடியா போரத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் மௌலவி .முஸ்தபா தெரிவு

0
125

(விசேட நிருபர்)

faedaffa-f210-4a9d-97e2-6180144cde2eகாத்தான்குடி மீடியா போரத்தின் தலைவராக இருந்த ஏ.எல்.டீன் பைறூஸ் தனது தலைமைப் பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து காத்தான்குடி மீடியா போரத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி மீடியா போரத்தின் விஷேட பொதுச் சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(24.7.2016) இரவு காத்தான்குடி மீடியா போரத்தின் பதில் தலைவர் பஸால் ஜிப்ரி தலைமையில் நடைபெற்றது

இதன் போது காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவராக இருந்த ஏ.எல்.டீன் பைறூஸ் தனது தலைமைப்பதவியை இராஜினாமாச் செய்வதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அனுப்பிய இராஜினாமக்கடிதம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அக்கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து புதிய தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

இக் கூட்டத்தில் செயலாளர் எம்.எச்.எம்.அன்வர் மற்றும் எஸ்.ஏ.கே.பழீலுர்ரஹ்மான் உட்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY